Thursday, November 27, 2008

பள்ளிக்கால கனவுகள்

பள்ளிக்கால கனவுகள் மீண்டும் தொடர்கின்றன...
அவள் நினைவாக...
முதன் முதலில் என் மனதை
தொடமால் தொட்டு
சரித்து விட்டு...

உயிர்மெய்யெழுத்தாக என்னை கலங்க வைத்து
சென்ற அந்தநாள் ...
இனிமையான நினைவுகளாக மனமுழுவதும்
தொடர்கின்றன...

Thursday, June 12, 2008

இனியவளே

என் நெஞ்சில் ஆயிரம் இடிகள்
உன்னொடு நடக்கிற இந்த இன்பப்போரில்..
தோற்றாலும் ஒரு கவலை இல்லை...என் இனியவளே!
உன்னிடம்தான் தோற்கிறேன்...
என்ற உணர்வோடு மீண்டும் வெற்றி பெறுவேன்.

Thursday, June 5, 2008

இடம் மாற்றங்கள்..

உனது அழகான தமிழ் பேச்சில்
என் உள்ளம் உடலைக் கடத்துகிறது.

உன் உதடுகளின் புன்னகையில்
என் இருதயம் இடம் மாற்றங்கள்..

என் உறுதியான நினைவலைகள்
உன்னில் மறைகின்றன.

என் எண்ணங்கள் கனவுகளாகின்றன
உன்தன் தரிசனங்களால்.

Monday, May 26, 2008

கண்ணிர்த் துளிகள்..

இன்றொடு பத்து வருடங்கள் கழிகின்றன.
உன்னை பார்க்காமல்..
இருந்தும் என் எண்ணஙகள் உன்னில்
நினைவிழந்து கிடைக்கின்றன..

உன் இமைகளின் ஒரத்தில் துளிர்விடும்
கண்ணிர்த் துளிகள்..
கல்லூரி வாழ்வின் நண்பர்களின் பிரிவினைகள்...
என் உணர்வுகளில் மனதில் தள்ளப்படும்
ஒரங்க நாடகமாக
இன்றும் மனதில் நீரோட்டமாக பதிவுகளாகின்றன.

நினைத்தாலே இனிக்கின்றன.

உன்னைப் பார்க்கும் பொழுது தெரியாத நேசம்
பார்ககாமால் தொடர்கின்றன...

என் மனதின் இரு பகுதிகளும் உன்னை நினைக்காமல்
இருக்க வைக்க முயற்சி செய்கின்றன..

உலகின் மாற்றங்களும் என்னில் பொருளாதர முன்னேற்றகளும் மாறினாலும்
உன்னை நினைக்கும் நித்திரைக்கனவுகள் தொடர்கின்றன..

உன் நினைவுகளும் எனது பயணங்களும்
இன்றும் நினைத்தாலே இனிக்கின்றன.

Wednesday, March 26, 2008

இருத்தல் வேண்டும்..

என் சிந்தனைகள் கலைகின்றன
உன் இமையின் எழுச்சியில்..
நித்தம் உன்னைப் பார்க்காமல் இருக்க
வேண்டுகிறேன்..

ஏழு பிறவிகள்
உலகில் உண்டு எனில்
மறு பிறவியில் நான்
உன்னை பார்க்காமல்
இருத்தல் வேண்டும்..

Tuesday, March 25, 2008

இன்னிசையாக

உனது ஆறுநாள் புன்னகை
என் இருதயத்தின் ஒரு சிறு கீரல்
நீ பேச முடியாத மௌனங்கள்
என்னுள் இன்னிசையாக
உனது அழுகுரல்
என் மனதின் பிரதிபலிப்பு
உனது மெல்லிய சிரிப்பு
எந்தன் ஜீன்களின் பரவசம்.

Tuesday, March 18, 2008

இழுக்கிறாய்..



என் குளிர்காலக் கனவுகள்
மறைகின்றன
நிகழ்கால நிஜங்களில்..

சிறு இடைவெளிகளில் உன்னை
காண்கிறேன்.
உன் இருகண்களில்
என்னை இழுக்கிறாய்..

Thursday, March 13, 2008

தலைப்புகள் இல்லாத கவிதைகள்



உன் கனிப்பான (கனிவான) பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...

உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..

உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.

எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..

எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளங்களில் பருவக்காற்றாக..


குயில் ஒசையாக என் மனதிலும்
தெருக்களிலும் வண்ணக்கோலங்கள்
இட்டு சென்று விட்டாள்..

கற்சிலை போலிருந்த எனக்கு
உயிர் அளித்தவளே நீ தான்..
என்னை ஏன் விலகிச் செல்கிறாய்..
நான் அறியாத காரணத்தால்..

Tuesday, March 11, 2008

என்னையறியாமல்...


என் மனதில்
சப்தங்கள் இல்லாமல்
யுத்தங்கள் செய்கிறாய்
என்னையறியாமல்...

உன் மலர்முகம் என்னை
மாற்றுகின்றன
என்னையறியாமல்..

காத்திருக்கிறேன்


மார்கழி முடியும் தறுவாயில்
தை மாத ஆரம்பம்
அறுவடை காத்திருக்கும்
விவசாயிகள்...

நானும் காத்திருக்கிறேன்
அவளின் அந்த கொலுசு
ஒலிகளுக்காக..

னது காத்திருக்கும் காதல் அலைகளால்
நானும் உனக்காக காத்திருக்கிறேன்
என்னை புரிந்து கொள்வாய் என்று...



முழுமதி


சன்னல் முற்றத்தின் அறை
நிலா வெளிச்சம்
என் மனத்திரையில்
உன் மலர்முகம்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் மனதில் முழுமதியின்
வெளிச்சமாக நீ தான்..

Monday, March 10, 2008

சிறுதூறல்



உன் உதடுகளின் புன்னகை
எந்தன் நெஞ்சில் ஒரு சிறுதூறல்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிறுதூறல்களாக வந்தவள்
இன்று
என் முழு மனதில்..


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



Wednesday, March 5, 2008

தென்றல்




உன்னைத்
தழுவிய தென்றல்
என்னையும் தழுவி
என்னை உன்னிடம்
மருள்கச் செய்தது...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னைத்தொடர்ந்த தென்றல்
என்னை உன்னில்
வீழ்த்தி உள்ளங்களை
கடத்தியது...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காலங்கள் கடக்கின்றன
உன் நினைவுகள் என்னில்
தென்றலாக...


Tuesday, March 4, 2008

என் மனமறியாமல்...







உன்னைப்
பார்க்கையில்
தெரியாத கவிதைகள்
உன்னை நினைக்கையில்
வருகின்றன
என் மனமறியாமல்...


Monday, February 25, 2008

நிறம் மாறாத பூக்கள்


மாற்றங்கள் இல்லா இவ்வுலகம்
இல்லை...
காலங்கள் மனிதனை
மாற்றுகின்றன...

என் மனத்தோட்டத்தில்
உள்ள நீ என்றும்
நான் பார்த்த இளமைச்சிரிப்புடன்
சிறுவயது முதல் இன்றும்..

என் மனதில் என்றும்
நிறம் மாறாத பூக்களாக..
மலர்ந்த வண்ணம்.

மழைக்காதல்



கார்கால மேகக்கூட்டங்கள்
வானில் வான்வில்லாக...

என்னில் பெய்யென பெய்யும்
மழையாக நீ...

மழை கூட நின்றுவிடும்
காலங்கள் மாறினால்..


Tuesday, February 19, 2008

நினைவுகளாக..


இயற்கையில்
அவளின் ஒசைகள்
என்னுள் குடையிருந்தும்
மழையாக..

என் வண்ணங்கள்
அவள் மலர்முகம்..
என் படைபலங்கள்
அவள் சிரிப்பொலி
என் மனம்
அவளின் நினைவுகளாக..

Monday, February 18, 2008

கனவுகளாக..



என்னில் காதல்
கவிதையில்!!
சப்தமில்லா உலகில் என் காதல்
கனவுகளாக..

கவிதையில் என்னில்
பல மாற்றங்களாக நீ!!
நேரில் பார்க்கமுடியாத கனவுகளாக..


Friday, February 8, 2008

பிப்ரவரி மாதக்கவிதைகள் -1





உன்னுள் வாங்கும் ஒளியை
நானே வெளியிடுகிறேன்
நடுநிசியில் உன்னைத் தேட..


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இருவரிகள் உன்னக்காக
எழுத நின்னைக்கிறேன்
நீ எங்கு இருக்கிறாய்
என்று தெரியாமல்..




~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அவளுடன் இனிய ஒரு நாள்
வாழ்ந்தால் போதும் என் உள்ளம்
அவளை மறவாமல்
தினமும் நினைக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்றும் உன் இன்முகம்
என் மீது திரும்ப
ஆவாலாக காத்து இருக்கிறேன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Sunday, February 3, 2008

பிப்ரவரி மாதக்கவிதைகள்



அந்த நாள்
அதிசயம் அவள்...


சப்தம் இல்லாமல்
சந்தங்கள் இல்லை
உன் புன்னகை இல்லாமல்
நீ இல்லை.



கவனங்கள் சிதறுகின்றன
நீ பார்க்காத பார்வையால்..
எனது பாடங்கள் படமாகின்றன
உன் திகட்டாத சிரிப்பால்...



உன்னை பார்த்ததில்
நான் பூவுலகில்
பார்க்க மறந்த நிகழ்வுகள் பல..



Saturday, February 2, 2008

நிழல்


பனிக்கால கனவுலகில்
நீ முழுநிலவாக..
நிகழ்கால உலகில்
நிழல்களாக..
நீ உலவுகிறாய்.
உன் மௌனங்கள்
என் மனதில் அம்புகளாக
தைத்த வண்ணம்
புரியாத வண்ணக்
கோலங்களாக நீ..
புதிர்களுக்கு பதில்
கிடைக்கின்றன
உன் புன்முறுவல்களுக்கு
பதில் இல்லை

நினைவுகள்



நீ புன்னகையுடன்
காட்சி தருகிறாய்
நான் நினைவுகள்
இழந்தவுடன்..


நினைவுகளில் நீ இல்லாமல்
நான் காணும்
எல்லா பொருளிலும்
நீ தான்.


உன் நினைவில் நான்
நிலாவில் நீ
உன்னை சுற்றிலும் வீண்மீன்கள்
என்னை சூழ்நத காலம்

Wednesday, January 9, 2008

என்னவளுக்காக..


தலைப்புகள் இல்லாத
கவிதைகளாக நான்
உனக்காக..
மலர்ந்த பூக்களாக நீ!

இன்றும்
யார் அந்த நீ!!
தேடுகிறேன்
எங்கும் நீ தென்படவில்லை..

உனக்காக காத்திருக்கிறேன்
நீ எனக்காக
என்னை தேடுவாய் என்று..

என் வாழ்க்கையின்
மாறதா நிகழ்வுகள்
தொகுப்புகளாக மாறும்
நேரம்
என்னவளுக்காக..

சந்திப்பு..


உன் புன்னகை
என்னில் மழைச்சாரல்..

ஆயிரமாயிரம் தவங்கள்
என்னில்
உன் கடைக்கண் பார்வைக்காக..

நீ அறியாமல்
பல நாள்
நீ அறிந்து சில நாள்..

உதடுகளின் சிரிப்பில்
உள்ளங்களை கடத்துகிறாய்..

உன் கன்னங்களின் குழிகள்
என் வாழ்வின் பரவசங்கள்..

என் சிந்தனைகளின்
தடுமாற்றம்
உன் தவிர்க்க முடியா
சந்திப்பு..

Tuesday, January 8, 2008

ஆயுதமில்லாமல்


முடிவுகளாக நீ
ஆரம்பமாக நான்..
விசித்தரமான சிறையில்
விடுகதையான வாழ்க்கைப் பாதையில்
போரட்டமான காலம்
ஆயுதமில்லாமல் நான்..

என் கனைகளின் கவனம் சிதறி
குளுமையான கனவுலகில்
என் நினைவுகளை இழந்து தவிக்கிறேன்

காலம் பதில் சொல்லும்
என் அழகிய வினாக்களுக்கு...




எங்கே நீ


கவிதைகளின் முடிவில்
நீ இருக்கிறாய்
நான் தொடக்கத்தில்..

என் கனவுலகின்
தென்றல் நீ..
ஓசைகள் இல்லாமல்
உன்னை கடக்கிறேன்.

என்னில் நீ


உன் இமையின் பார்வையில்
பிறந்த குழந்தையும் எழுகிறது
பார்க்க..

என்னில் அமைதியான நிகழ்வுகள்
உன்னை தொடர்ந்து தேடல்களாக
மாறுகின்றன..

என் எண்ணங்களின் பிரதிபலிப்புகள்
எழுத்துக்களாக மாறும் தறுவாயில்
கருமையாக என்னை மையம்
கொள்கிறாய்..

மாறும் உலகில் மாறாத நீ



என் கவிதைகளில்
பெரும்பான்மை நீ தான்
கூடவே சில இயற்கை நிகழ்வுகள்..


கவிதைகளில்..
வரிகளின் முடிவில் சொற்கள் மாறுகின்றன
மாற்றங்கள் இல்லாமல் இவ்வுலகம் இல்லை..
என் மனதில்
அழியாத வடிவமாக என்றும் நீங்காமல் நீ!

Monday, January 7, 2008

புன்னகை


இனிய பொன்நாட்கள்
வெறுமையாக கழிகின்றன
நீ இருந்தும்..நான் பேசாமல்..

நான் பேசும் மொழிகளே
மாறுகின்றன
என் மனமறியாமல்...

மௌனமாக இருக்கிறேன்.
மறுக்க முடியாமால்
திரும்பவும் புன்னகை செய்கிறாய்...

Wednesday, January 2, 2008

காலம்


உன் புன்னைகையில்
சிலையானேன்
என்னை மறந்து..

வானில் இடி மின்னல்
என்னில் மழையாக..நீ

இலைகள் துளிர்விடும்
ஆரம்பம்..

என் மனதில் ரீங்காரமாக
வளர்கிறாய்.

டிசம்பர் மாத பனித்துளிகள்
மடிந்து போகின்றன
புவியில் பட்டு..

நானும் உன்னில் மறைகிறேன் ..

இலைகள் மறைந்து

சிறு கிளைகளாக
மாறும் வசந்தகாலம்..

என்னில் பரவும் முழுமையான
முதற்காலம்..