Thursday, October 18, 2007

நீ இல்லை


அழகு இருக்கிற உனக்கு
அந்த நாளில் சொல்ல
மனசு நிறைய வார்த்தைகள் இல்லை!
மனசு இருக்கிற எனக்கு
அப்பொழுது சொல்லுவதற்கு இயலவில்லை!
தற்பொழுது மனசு நிறைய வார்த்தைகள் இருந்தும்
நீ இல்லை!
எங்கு தேடுவேன் உன்னை
உலகமயமாக்கலான இவ்வுலகத்தில் !

பௌர்ணமியின் வெளிச்சம்




பௌர்ணமியின் வெளிச்சம்
வெறும் பதினைந்து நாள்தான்
உன் நினைவுகள் பல நூறு பிறவிகள்!
அழகுகள் வெறும் பத்து வருடங்கள் தான்
உன் மன அதிர்வுகள் சில ஆண்டுகள்!


பௌர்ணமியின் வெளிச்சம்
இரவு பகல் ஆனது உன் நேசத்தில்..

கவிதைகளில்..


என்
கவிதைகளில்
நான் நீ மட்டும்..
எப்பொழுது நாம் ஆவோம்
நம்
கவிதைகளில்..

கனவுகளுக்குள் நான்


கனவுகளுக்குள் நான்
என்
கவிதைகளுக்குள் அவள்
செருக்காக இருந்த
என்னை அவள் மறக்கா வண்ணம்
இருக்கவைத்து சென்றுவிட்டாள்
அவளோடு சேர்ந்து என்
எண்ணங்களும் சென்றுவிட்டன ..

தேடல்


எனக்கு தெரிந்தும் தெரியாமலும் நீ யார் என்று
தெரியாமல் இன்றுவரை
தேடுகிறேன்!

தேடல்கள் இருக்கும் வரை
இவ்வுலகில் மாற்றங்கள் இருக்கும் என்று சொல்லுகிறார்கள்
மாற்றங்கள் நடக்கும் வரை நீ இருப்பாய் என்று
தெரிவதில்லை இருந்தும் தேடுகிறேன்!

Friday, October 12, 2007

என் கனவுலகம்


காதலிக்கத்தான் நினைக்கிறேன்
உன் மறைவில்
விரும்புகிறேன் என்றேன்
என் கனவுலகில்..

நெஞ்சங்கள் என்றும் பதினாறுடன் வாழும்
வசந்த காலங்கள் நான் இருக்குமிடங்கள்..
என் இனியவளின் இசை விடங்கள்

Thursday, October 11, 2007

சுடும் அவள்



புவியில் நான்
நிலவிலும் நினைவிலும் அவள்
இடையில் இரவு, அருகில் நட்சத்திரங்கள் ..
பகலில் சுடும் சூரியன்
நினைவிலும் சுடும் அவள்...

அந்த நாள்
தேவலோக மங்கை அவள் ..
என் மனதில் நடனம் புரிந்து மனதை மயக்கி
என்னை வண்ணக்கனவுகளில் வருத்தியவள்..

Wednesday, October 3, 2007

நினைவில்.


ஏன் இந்த சிந்தனை உன்னை மறைந்த
நினைவில்..
களம் என்ற காலம் உன்னருகில் இருந்தால் போதும்
நிலம் என்ற புவி தாங்கி பிடிக்கும்..

முதல் சந்திப்பு




தென்மேற்கு பருவக் காற்று
பலமாக மோதியது என்னிடம்..
மேகம் கறுத்தது
சிறு சிறு தூறல் பெரு மழையாகிய தருணம்..
அன்று தான்
நான் உன்னை பார்த்த முதல் சந்திப்பு..

மறு தினமும் மௌனம்
உன்னை பார்த்த முதல் சந்திப்பில்