Monday, December 31, 2007

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


சிறு குழந்தையின் சிரிப்பு ஒலியில்
உலகம் அதிர..
இளைஞர்கள் கனவுகள் நிறைவேற
ஏழை எளியவர்களின் வறுமை ஓழிய
உலகில் அமைதி நிகழ்ந்து
இயற்கையின் கோபம் தணிந்து
பூக்கள் மலர
இனிய புத்தாண்டு தொடங்கட்டும்..

Thursday, December 27, 2007

மீண்டும் நினைவுகள்


மீண்டும் நினைவுகள்
என்னை துரத்துகின்றன
உன்னை மறக்க நினைப்பதால்..

மார்கழி மாத கடுமையான பனியும்
சுடுகிறது நீ இல்லாமல்...

பனி பல பொழியும்
இந்தநாள் உன்னொடு இல்லாமல்
தனிமையில் நான் வாடுகிறேன்
நீ இல்லாமல்...

நேற்று வரை நீ பார்த்தாய்
இன்று வரை நான் யோசித்தேன்
நாளை நீ இருப்பாய் என்று அறியாமல்...

Monday, November 26, 2007

மௌன மொழிகள்




உன்னோடு சேர்ந்து இரு கைகள் சேர்த்து
மாலை மழை சாரலில் நடக்க
மறு பிறவிகள் எடுக்க வேண்டும்
என்று தான் நினைக்கிறேன்

உன் மௌன மொழிகள் சிறிதும் புரியவில்லை..

இந்த மழைக்காலம் முழுவதும்
மழையில் நனைய
வெகுநாள் கனவுகள் நிறைவேற
தயங்காமல் காத்திருக்கிறேன்..


அந்த நொடியில்...


எது காலை..
எது மதியம்..
எது மாலை தெரியவில்லை..
உன்னை பார்த்தா அந்த நொடியில்...

Thursday, October 18, 2007

நீ இல்லை


அழகு இருக்கிற உனக்கு
அந்த நாளில் சொல்ல
மனசு நிறைய வார்த்தைகள் இல்லை!
மனசு இருக்கிற எனக்கு
அப்பொழுது சொல்லுவதற்கு இயலவில்லை!
தற்பொழுது மனசு நிறைய வார்த்தைகள் இருந்தும்
நீ இல்லை!
எங்கு தேடுவேன் உன்னை
உலகமயமாக்கலான இவ்வுலகத்தில் !

பௌர்ணமியின் வெளிச்சம்




பௌர்ணமியின் வெளிச்சம்
வெறும் பதினைந்து நாள்தான்
உன் நினைவுகள் பல நூறு பிறவிகள்!
அழகுகள் வெறும் பத்து வருடங்கள் தான்
உன் மன அதிர்வுகள் சில ஆண்டுகள்!


பௌர்ணமியின் வெளிச்சம்
இரவு பகல் ஆனது உன் நேசத்தில்..

கவிதைகளில்..


என்
கவிதைகளில்
நான் நீ மட்டும்..
எப்பொழுது நாம் ஆவோம்
நம்
கவிதைகளில்..

கனவுகளுக்குள் நான்


கனவுகளுக்குள் நான்
என்
கவிதைகளுக்குள் அவள்
செருக்காக இருந்த
என்னை அவள் மறக்கா வண்ணம்
இருக்கவைத்து சென்றுவிட்டாள்
அவளோடு சேர்ந்து என்
எண்ணங்களும் சென்றுவிட்டன ..

தேடல்


எனக்கு தெரிந்தும் தெரியாமலும் நீ யார் என்று
தெரியாமல் இன்றுவரை
தேடுகிறேன்!

தேடல்கள் இருக்கும் வரை
இவ்வுலகில் மாற்றங்கள் இருக்கும் என்று சொல்லுகிறார்கள்
மாற்றங்கள் நடக்கும் வரை நீ இருப்பாய் என்று
தெரிவதில்லை இருந்தும் தேடுகிறேன்!

Friday, October 12, 2007

என் கனவுலகம்


காதலிக்கத்தான் நினைக்கிறேன்
உன் மறைவில்
விரும்புகிறேன் என்றேன்
என் கனவுலகில்..

நெஞ்சங்கள் என்றும் பதினாறுடன் வாழும்
வசந்த காலங்கள் நான் இருக்குமிடங்கள்..
என் இனியவளின் இசை விடங்கள்

Thursday, October 11, 2007

சுடும் அவள்



புவியில் நான்
நிலவிலும் நினைவிலும் அவள்
இடையில் இரவு, அருகில் நட்சத்திரங்கள் ..
பகலில் சுடும் சூரியன்
நினைவிலும் சுடும் அவள்...

அந்த நாள்
தேவலோக மங்கை அவள் ..
என் மனதில் நடனம் புரிந்து மனதை மயக்கி
என்னை வண்ணக்கனவுகளில் வருத்தியவள்..

Wednesday, October 3, 2007

நினைவில்.


ஏன் இந்த சிந்தனை உன்னை மறைந்த
நினைவில்..
களம் என்ற காலம் உன்னருகில் இருந்தால் போதும்
நிலம் என்ற புவி தாங்கி பிடிக்கும்..

முதல் சந்திப்பு




தென்மேற்கு பருவக் காற்று
பலமாக மோதியது என்னிடம்..
மேகம் கறுத்தது
சிறு சிறு தூறல் பெரு மழையாகிய தருணம்..
அன்று தான்
நான் உன்னை பார்த்த முதல் சந்திப்பு..

மறு தினமும் மௌனம்
உன்னை பார்த்த முதல் சந்திப்பில்

Thursday, September 27, 2007

அழகு


பூந்தோட்டத்தில் உள்ள பூக்கள்
உன் கூந்தலில் இருந்தால் தான் அழகு
என் மனதுக்குள் நீ இருந்தால்
எனக்கு அழகு..

Tuesday, September 25, 2007

இனி...



இனி ஒரு சிந்தனை செய்வோம்
உலகமக்களுக்கு ஒருவேளை
உணவு கிடைக்கவேண்டுமென்று.

இனி ஒன்று நினைப்போம்
உலகில் உள்ள கடவுள்களும் மனிதர்களும்
ஒன்றே என்று.

இனி ஒன்று யோசிப்போம்
உலகில் இயற்கையை அழிக்காமல்
இருப்போம் என்று.

இனி ஒன்று நினைப்போம்
உலகில் மாற்றங்கள் நிகழ நாமும்
காரணம் என்று.

இனி ஒன்று நம்புவோம்
உலகில் போர்கள்
நிகழ கூடாதுதென்று.

இனி ஒரு எண்ணம் எண்ணுவோம்
உலகத்தில் அமைதி
நிகழ வேண்டுமென்று

நீ இல்லாமல்..


அந்த நாள்
என்னிடம் எதுவும் இல்லை
உனக்கு கொடுக்க!
ஆனால் தற்பொழுது எல்லாம் இருக்கிறது
நீ இல்லாமல்!

->->->->->->->->->->->->->->->->->->->->->->->->

நான் காணும் நடுநிசி நிலவும்
சுடுகிறது நீ இல்லாமல்..

->->->->->->->->->->->->->->->->->->->->->->->->

என் இளமைக்காலம் இப்படியே போய்விடும்
என்ற அச்சம் நீ இல்லாமல்..

->->->->->->->->->->->->->->->->->->->->->->->->

நீ இல்லா இனிமையான இளமை
முதுமையானதாக தெரிகிறது..

Friday, September 21, 2007

விடியல்...


காலை விடியல் தொடங்கும் முன்
நீ வந்து என் முகம் முன்
புன்முறுவல்கள் உடன் காட்சி தருகிறாய்..

----------------------------------------------------------------------------------

கீழ்வானா மஞ்சளான
மாலை மயக்கத்தில் என் இனிய
பொழுதுகளை உன் மடியில் கழிக்கவேண்டும்.

----------------------------------------------------------------------------------

காலையில் பார்த்த உன் முகம்
மாலையில் மறந்து விட்டது..
ஏனெனில் மற்றொருவள்
என் பாதையில் வழி மறைத்து சென்று விட்டாள்.

----------------------------------------------------------------------------------

Thursday, September 20, 2007

நான் இல்லை


இந்த உலகத்தில் நான் இல்லை
அவளுடன்
மாலையில் எனக்காக
உருவாக்கிய கனவுலகத்தில்
அவள் கை பிடித்து நடந்து செல்கிறேன்
தொலைந்து விடுவேன் என்று...

Thursday, September 13, 2007

மழை



கொட்டும் மழையில்
வேகமான காற்றில் தவழும் கூந்தல் மறைத்து
அவள் செல்லும் பொழுது
கருமேகம் என்னை மறைத்தது
அவளை பார்க்க விடாமல்..

=============================================

விட்டு விட்டு பெய்த மழையில்
என் நெஞ்சை தொட்டு விட்டு
சென்று விட்டாள்..

Tuesday, September 11, 2007

இனிமையான நிகழ்ச்சி


அவளை முதன் முதலில் பார்த்த
அந்த நாள் மகிழ்ச்சி
வாழ்க்கையில் என்றும்
இனிமையான நிகழ்ச்சி

உனக்கும் எனக்கும்
வேறுபட்ட மொழியிலும் கூட
நீ முதன் முதலில் பேசிய
அந்த தமிழ் வார்த்தை மிகவும் பிடித்தது..

Wednesday, September 5, 2007

விடை கிடைக்காமல்..



பல நாள் மௌனம்
உன்னை பார்க்காமல்...
சில நாள் துன்பம்
உன்னை நேசித்ததால்..
விடுகதையான வாழ்க்கை
விடை கிடைக்காமல் நான்...

Thursday, August 23, 2007

காத்திருப்பு...


கடற்கரையில் என்னை கடந்து சென்றவள்
இரு இமைகளில் எடுத்து
சென்றுவிட்டாள்..

அலைகள் என்னை வருடின.

அவளின் வருகைக்காக மறுநாள்
காத்திருந்தேன்..

ஓசைகள் இல்லா அலைகள் கரைகளை
தொட்டு சென்றன.

நீ வரவில்லை..

முடிவுகள் இல்லாத பயணங்களாக தொடர்கின்றன
இந்த காத்திருப்பு...

Tuesday, August 21, 2007

திகைக்கிறேன்





நெடுநாள் காத்திருக்கிறேன் புன்னகையுடன்
நீ மௌனங்களாக..

<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-

உனக்குள் இருந்த நான் எப்பொழுது
தெரிய போகிறேன் இந்த உலகிற்கு..

<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-

மௌனங்களாகவே கழிகின்றன இந்த
பொன் நாள்கள் ...

<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-

நீ பேசும் மொழிகள் புரியாமல் போல்
புரிகின்றன..

<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-

ஏனோ என்னை பிடிக்கவில்லை.
புதிராக திகைக்கிறேன்..

<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-

Saturday, August 18, 2007

தினம் தினம்


தினம் தினம் கவிதை எழுதி என்ன
கண்டேன் என்று தெரியவில்லை..
ஒரு மகிழ்ச்சி மட்டும் மனதில்
உன்னை நினைப்பததால்..

->->->->->->->->->->->->->->->->->->->->->->->->

வருங்காலம் என்பது
எப்படி இருக்கும் நான் நினைக்கவில்லை
உன்னை நேசித்ததால்..

->->->->->->->->->->->->->->->->->->->->->->->->

உன் இன்முகம் என் மீது திரும்ப
ஆவலாக காத்து இருக்கிறேன்.

->->->->->->->->->->->->->->->->->->->->->->->->

நீ என்னை மறந்தாலும்
என் உணர்வுகளில் நீதான் என்றும்.

->->->->->->->->->->->->->->->->->->->->->->->->

சித்தனவாசல்


சித்தனவாசல் சிற்பங்கள் தான் அழகு
என்று நினைத்திருந்தேன்
கோடைக்கால மேகத்தில் மின்னலாக வந்த
உன்னை ரசித்ததில் சிற்பங்கள் சிதறின
நீ மேலும் அழகானாய்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பூவுலகில் உன்னை கனவுகளில் தான் காண்கிறேன்
நினைவுகளில் எப்பொழுது தென்படுவாய்..

விண்வெளி மண்டலத்தில் நட்சத்திர கூட்டத்தில் தேடினேன்
அங்கும் நீ தென்படவில்லை ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னை எண்ணி


கவிதைகள் பிறக்கின்றன
உன்னை நின்னைக்கும் நேரம் வரை
வார்த்தைகள் வர மறுக்கின்றன
பேசமுடியாமல் உன்னிடம்..


******************************************************

கவிதைகள் என்னை அழைத்தன
அவள் வருவாள் என்றெண்ணி
கார்மேகம் கருப்பானது..
அவளிடம் நான் கொண்ட
மிகுந்த காதலால்..

******************************************************

கலங்காத கண்கள்
காத்திருக்கும் காதல்
என் மனம் மயங்கும் நேரங்கள்
எல்லாம் அவள் பார்க்கும் அந்த
அர்த்தமற்ற பார்வைகளில்..

******************************************************

காலம் தான் பதில் சொல்லும்
என் அழகிய வினாக்களுக்கு
விடை தெரியாமல்
என்றும் உன்னை எண்ணி..

******************************************************